50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 200 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை 3200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டை 900 ரூபாயாக காணப்பட்ட நிலையில், இந்த ஓராண்டில் சிமென்ட் மூட்டையின் விலை 6 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக பல்வேறு இடங்களுக்கு சீமெந்து அடுக்குகளை கொண்டு செல்வதில் பாரிய அசௌகரியங்கள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்கொள்வதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
சீமெந்து விலையேற்றம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது தொழிலில் பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 Comments