கடந்த மாதத்தை விட இந்த மாதம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையில் போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
0 Comments