நாளை 6ம் தேதி வர வேண்டிய எரிவாயு கப்பல் வராது
நாளை (புதன்கிழமை) இலங்கைக்கு வரவிருந்த 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல் மேலும் 3 நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 9ஆம் திகதி குறித்த கப்பல் இலங்கைக்கு வரும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் 11 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனம் உலக வங்கியுடன் 100,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதுடன், அதற்கமைவாக இந்த எரிவாயு இருப்புக்கள் இலங்கைக்கு வரும்.
0 Comments