எரிபொருள் கோரி ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (06) புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று பல அலுவலக புகையிரதங்களை இரத்து செய்ய நேரிட்டதாக திணைக்களத்தின் பொது முகாமையாளர் திரு.காமினி சேனவிரத்ன தெரிவித்தார்.
இன்று இயக்கப்பட உள்ள 48 அலுவலக ரயில்களில் 22 மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 Comments