தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக, இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு இங்கிலாந்து மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக, பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தின் ஊடான விமானப் போக்குவரத்திற்கு இந்த ஆலோசனை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அவசர சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் பற்றாக்குறையால் தினமும் மின்வெட்டு ஏற்படுகிறது. எரிபொருளுக்காக மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கின்றனர்.
போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களும் பதிவாகி வருகின்றன. பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலைத் தடைகள் மற்றும் அமைதியின்மை ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments