கோட்டையிலுள்ள ஜனாதிபதி இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை கைது செய்து போலீஸ் பஸ்சில் ஏற்றிச் சென்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெளியே வருமாறு கோரி இன்று காலை அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து அதிருப்தி தெரிவிக்கும் வகையில் பெண்கள் சிலர் உட்பட பலர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments